search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவன் மீட்பு"

    மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் 200 அடி ஆழம் கொண்ட ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் தீவிர முயற்சிக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டான். #BoyTrappedBorewell #BoyRescued
    புனே:

    மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் தோரண்டல் கிராமத்தில் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் ரவி, அங்கு மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டான். சிறுவனைக் காணாமல் தேடிய பெற்றோர், அவன் விளையாடிய இடத்தில் தேடியபோது, அவன் ஆழ்குழாய் கிணற்றில் விழுந்திருப்பதை அறிந்தனர். இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 12 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியிருந்ததால் கயிறு மூலம் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், சிறுவனின் உடலில் பலத்த காயங்கள் ஏற்படும் வாய்ப்பு இருந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. எனவே, தேசிய பேரிடர் மீட்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



    அவர்கள் வருவதற்குள், உள்ளூர் மக்கள் சேர்ந்து அந்த ஆழ்குழாய் கிணற்றின் பக்கவாட்டில் பள்ளம் தோண்டத் தொடங்கினர். பேரிடர் மீட்புக்குழுவினர் வந்து, பக்கவாட்டில் தோண்டப்பட்ட பள்ளத்தை மேலும் ஆழப்படுத்தி,  சிறுவன் சிக்கியிருந்த இடத்திற்கு அருகில் துளையிட்டு பத்திரமாக மீட்டனர். சுமார் 16 மணி நேரத்திற்குப் பிறகு சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டதால் பெற்றோர் நிம்மதி அடைந்தனர். #BoyTrappedBorewell #BoyRescued
    மத்திய பிரதேசத்தில் 70 அடி ஆழ்குழாய் கிணற்றுக்குள் சிக்கிய சிறுவன் 12 மணி நேரம் போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டான்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள கேர்கர் கிராமத்தில் வசித்து வருபவர் ஆதித்யா பிரதாப். இவரது மகன் தேஜ்பிரதாப்.

    2 வயதான அவன் நேற்று முன்தினம் வீட்டுக்கு அருகில் உள்ள வயல் பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்தான். அன்று இரவு 10.30 மணி அளவில் அவன் மீண்டும் வயல் ஓரத்தில் சென்று தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டு இருந்தான்.

    அந்த பகுதியில் ஆழ்குழாய் கிணறுக்காக தோண்டிய இடம் மூடப்படாமல் இருந்தது. அதை கவனிக்காமல் ஓடிய தேஜ்பிரதாப் கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்த ஆழ்குழாய் கிணற்றுக்குள் விழுந்து விட்டான். அவனது தந்தை ஆதித்ய பிரதாப் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக அவர் சிங் ராங்கி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்து உதவி கோரினார். போலீசார் அந்த வயல் பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    சனிக்கிழமை இரவு 11 மணிக்கு ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு ஆழ்குழாய் கிணறு அருகே குழி தோண்டப்பட்டது. இதற்கிடையே குழாய் மூலம் அந்த சிறுவனுக்கு ஆக்சிசன் செலுத்தப்பட்டது. மேலும் தொலைத் தொடர்பு கருவி மூலம் அந்த சிறுவனுக்கு தைரியம் அளிக்கும் வகையில் உறவினர்கள் பேசிக் கொண்டே இருந்தனர்.

    நவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்ததில் அந்த சிறுவன் ஆழ்குழாய் கிணற்றுக்குள் சுமார் 70 அடி ஆழத்தில் சிக்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 70 அடி ஆழத்துக்கு அருகில் பள்ளம் தோண்டப்பட்டு அந்த குழாய் துண்டிக்கப்பட்டது. 12 மணி நேரம் இந்த மீட்பு பணி நடந்தது.

    நேற்று பகல் 11 மணிக்கு அந்த சிறுவன் சிக்கியிருந்த குழாய் ஓட்டை போடப்பட்டு அதிலிருந்து தேஜ்பிரதாப்பை மீட்டனர். அவன் மயங்கிய நிலையில் இருந்தான்.

    உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளித்து அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் கழித்து அவன் சகஜ நிலைக்கு திரும்பினார். 70 அடி ஆழம் வரை சென்று உயிர் தப்பிய அந்த சிறுவனை மாவட்ட அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    சென்னையில் கடத்தப்பட்ட சிறுவனை புகார் கொடுத்த 7 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். இது தொடர்பாக தாய், மகளை போலீசார் கைது செய்தனர். #BoyRescue
    சென்னை:

    புளியந்தோப்பு போகிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி துர்காதேவி. இந்த தம்பதிக்கு அஜய் (வயது 3) என்ற மகனும், 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர். அஜய் அருகில் உள்ள மாநகராட்சி உருது பள்ளியில் படித்து வருகிறான். அஜயை வழக்கமாக பிரகாஷ் பள்ளியில் விட்டு விட்டு பின்னர் அழைத்து வருவார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளி விடுவதற்கு சற்று முன்கூட்டியே ஆசிரியை மேனகாவிடம் 2 பெண்கள் சென்று தங்களை அஜய் உறவினர்கள் என்று அறிமுகம் செய்து கொண்டனர். மேலும் தங்களுடன் சிறுவனை அனுப்பி வைக்குமாறு கேட்டனர். உடனே ஆசிரியை மேனகா, துர்காதேவிக்கு போன் செய்து விசாரித்தார். தனது கணவர் சார்பில் யாரேனும் வந்திருப்பார்கள் என நம்பி அஜயை அவர்களுடன் அனுப்பி வைக்குமாறு துர்காதேவி கூறினார்.

    பள்ளியை விட்டு அஜய் வீட்டுக்கு வராததால் அங்கு சென்று அவனுடைய பெற்றோர் விசாரித்தனர். அப்போது தான் அஜய் கடத்தப்பட்டது தெரியவந்தது. இது குறித்து மாலை 6 மணிக்கு புளியந்தோப்பு போலீசில் புகார் கொடுத்தனர்.

    புகாரின் பேரில் துணை கமிஷனர் சாய்சரண் தேஜஸ்வி, இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு கண்காணிப்பு கேமராவில் அஜயை 2 பெண்கள் தூக்கி சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

    சிறுவனை பெண்கள் கடத்தி சென்ற போது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி.

    இது குறித்து அஜய் பெற்றோரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள், அந்த பெண்களில் ஒருவர் தங்களுக்கு தெரிந்தவர் என்றும், 2013-ம் ஆண்டு வீடு கட்டும் போது கட்டுமான பணியில் அந்த பெண் ஈடுபட்டார் என்றும் தெரிவித்தனர்.

    அதை வைத்து அந்த பெண்ணின் முகவரியை போலீசார் கண்டறிந்தனர். மேலும் பூட்டப்பட்டு இருந்த அந்த வீட்டை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். நள்ளிரவில் வீட்டுக்கு வந்த அந்த பெண்ணை போலீசார் பிடித்தனர். விசாரணையில் வீட்டின் அருகே நிறுத்திவைக்கப்பட்டு இருந்த ஆட்டோவில் சிறுவன் அஜய் இருப்பது தெரியவந்தது. உடனே சிறுவனை போலீசார் மீட்டனர்.

    இது குறித்து போலீஸ் விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

    சிறுவனை கடத்திய பெண் வியாசர்பாடி கணேசபுரம் பகுதியை சேர்ந்த குட்டியம்மா (38) ஆவார். அவருடன் வந்தவர் ஓட்டேரியில் வசிக்கும் அவரது மகள் ஐஸ்வர்யா (20). ஓட்டேரியில் வசிக்கும் ஒரு பெண் தனது மகளுக்கு குழந்தை இல்லாததால் ஒரு குழந்தையை தத்து எடுக்க விரும்புவதாகவும், அதற்கு பணம் கொடுக்க தயாராக இருப்பதாகவும் குட்டியம்மாவிடம் கூறியுள்ளார். இதனால் குழந்தையை கடத்தி அந்த பெண்ணிடம் கொடுத்தால் தனக்கு பணம் கிடைக்கும் என்றும், அதை வைத்து தனது மகளுக்கு சீர்வரிசை செய்யலாம் என்றும் குட்டியம்மா முடிவு செய்து அஜயை கடத்தி உள்ளார்.

    இவ்வாறு போலீசார் கூறினர்.

    இதையடுத்து குழந்தை கடத்தலில் ஈடுபட்ட குட்டியம்மா, ஐஸ்வர்யாவை போலீசார் கைது செய்தனர். 6 மணிக்கு சிறுவனின் பெற்றோர் புகார் கொடுத்தனர். நள்ளிரவு 1 மணிக்கு சிறுவனை போலீசார் மீட்டனர். கடத்தப்பட்ட சிறுவனை புகார் தெரிவித்த 7 மணி நேரத்தில் மீட்ட இன்ஸ்பெக்டர் ரவி காலில் விழுந்து துர்காதேவி நன்றி தெரிவித்தார். #BoyRescue

    சென்னை புளியந்தோப்பு அருகே சிறுவனை கடத்திய 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    புளியந்தோப்பு போகிப் பாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ்-துர்கா தேவி தம்பதியின் மகன் அஜய் (3).அதேபகுதியில் உள்ள மாநகராட்சி உருது படித்து வந்தான். நேற்று காலை பள்ளிக்கு சென்றான்.

    அப்போது பள்ளிக்கு வந்த ஒரு பெண் தான் சிறுவனின் அத்தை தேவி என்று கூறி மாணவனை அழைத்தார். இதை உறுதி செய்வதற்காக தன்னிடம் இருந்த போனில் சிறுவனின் தாய் பேசுவதாக ஆசிரியையிடம் தெரிவித்தார்.

    அதில் பேசிய பெண், தன் மகன் அஜய்யை அத்தையுடன் அனுப்பி வைக்கும்படி கூறினார். இதை நம்பிய ஆசிரியை மாணவன் அஜய்யை அந்த பெண்ணுடன் அனுப்பி வைத்தார்.

    மாலையில் மகன் அஜய் வீடு திரும்பாததால் உறவினர் வீடுகளில் தாயும், தந்தையும் தேடினார்கள். பள்ளிக்கு சென்று கேட்ட போது பையனின் அத்தை தேவி என்று கூறி அழைத்து சென்றதை தெரிவித்தனர். 2 பெண்கள் சேர்ந்து மாணவனை கடத்தியது தெரியவந்தது.

    இதுகுறித்து புளியந்தோப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். பள்ளியின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன.

    அப்போது பள்ளிக்கு வந்த பெண் ஏற்கனவே பிரகாஷ் வீட்டில் கூலிவேலை செய்த குட்டியம்மாள் என்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று இரவு 1 மணி அளவில் அந்த பெண் வசிக்கும் வியாசர்பாடி கணேசபுரத்துக்கு போலீசார் சென்றனர்.

    அங்கு குட்டியம்மாள் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஆட்டோவில் சிறுவன் அஜய் தூங்கிக் கொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். உடனே சிறுவனை மீட்டனர்.

    அவனை கடத்தி வந்த குட்டியம்மாள் (38), அவருடைய மகள் ஐஸ்வர்யா (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ஜோதி என்ற பெண்ணிடம் விற்பதற்காக சிறுவன் அஜய்யை குட்டியம்மாளும் அவருடைய மகள் ஐஸ்வர்யாவும் கடத்தியது தெரிய வந்தது.மீட்கப்பட்ட சிறுவன் அஜய்யை பெற்றோரிடம் புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் ரவி ஒப்படைத்தார்.

    இந்தோனேஷியாவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் உயிரிழந்த நிலையில் 12 வயது சிறுவன் மட்டும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினான். #Indonesia #PlaneCrash
    ஜகார்த்தா:

    பபுவா மாகாணம் தனாவில் இருந்து நேற்று மாலை ஒக்சில் பகுதிக்கு சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் 12 வயது சிறுவன் உள்பட 9 பேர் இருந்தனர். இந்த விமானம் ஒக்சில் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது.



     இதனால் அதிர்ச்சியடைந்த விமான நிலைய அதிகாரிகள், காணாமல் போன அந்த விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் விமானம் பெகுனுங்கன் பிண்டாங் மாவட்டத்தின் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி கிடப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து மீட்புக்குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 8 பேர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது, 12 வயது சிறுவன் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டான்.  இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  #Indonesia #PlaneCrash #tamilnews
    தாய்லாந்து குகைக்குள் சிக்கியிருந்த சிறுவர்களில் இதுவரை 10 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 2 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    பாங்காக்:

    தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மீட்பு பணி தொடங்கப்பட்டது. குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் மிகுந்த பசியுடன் சோர்வாக இருந்ததால் அவர்களுக்கு முதலில் உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டன. பின்னர் அவர்களை வெளியே கொண்டு வரும் வழிமுறைகளை மீட்புக்குழுவினர் ஆராய்ந்தனர்.

    திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்திருந்தது. இதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் சிக்கியிருக்கும் அவர்களை உடனே வெளியே கொண்டு வந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் நிதானமாக பணியை தொடங்கினர்.

    கடும் சவால்களுக்கு மத்தியில் நடந்த மீட்பு பணியின்போது, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மீட்புக்குழு வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் மீட்பு பணியில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. அதன்பின்னர் மழை எச்சரிக்கைக்கு மத்தியிலும் துரிதமாக மீட்பு பணியை மேற்கொண்ட குழுவினர், இரண்டு கட்டங்களாக 8 சிறுவர்களை மீட்டனர்.

    இந்நிலையில், இன்று மூன்றாவது கட்ட மீட்பு பணியின்போது 2 சிறுவர்களை பத்திரமாக மீட்டு குகைக்கு வெளியே அழைத்து வந்தனர். அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 3 பேரும் விரைவில் மீட்கப்படுவார்கள் என்றும் மீட்புக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். #ThaiCaveRescue
    காவேரிப்பட்டணம் அருகே ஆடு மேய்ச்சலுக்காக ரூ.5 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட சிறுவனை மீட்ட அதிகாரிகள் அவனை அரசு பள்ளியில் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள குட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 38). விவசாயியான இவர் 50 ஆடுகளை வளர்த்து வருகிறார்.

    இந்த ஆடுகளை 7 வயது சிறுவன் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றான்.இதுகுறித்து சமூக ஆர்வலர் ராஜேஷ் என்பவர் தேசிய தொழிலாளர் திட்ட இயக்குனர் பிரியாவுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து இயக்குனர் பிரியா, தொழிலாளர் உதவி ஆணையாளர் ஞானவேல், துணை ஆய்வாளர் முத்து, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் பிரசன்னகுமாரி மற்றும் வின்சென்ட் உள்ளிட்டோர் சிறுவனை மீட்டு கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் அந்த சிறுவனிடம் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சரவணன் விசாரணை நடத்தினார்.

    அந்த சிறுவனை விவசாயி வடிவேலிடம் ரூ. 5 ஆயிரத்திற்கு விற்றுச் சென்ற அவனது தந்தையை பெங்களூருவில் இருந்து அழைத்து வந்து விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும் சிறுவனை வேலைக்கு அமர்த்திய விவசாயி வடிவேலுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மீட்கப்பட்ட சிறுவன் தருமபுரியில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளான். இன்று அவனை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பரிசோதனை செய்து அவனுக்கு வயது சான்றிதழ் பெற்று அதன்பிறகு அவனை பள்ளியில் சேர்க்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    மேலும் சிறுவனை விலைக்கு வாங்கி ஆடு மேய்க்க பயன்படுத்திய விவசாயி வடிவேல், சிறுவனின் தந்தை ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். #tamilnews
    ×